ஆப்கான் ஜனாதிபதி தேர்தலில் மிகக் குறைவான வாக்கு பதிவு

2001 ஆம் ஆண்டு கூட்டுப்படை தலிபான்களை வெளியேற்றிய பின் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் மிகக் குறைவான வாக்குப் பதிவு இம்முறை இடம்பெற்றிருப்பதாக ஆரம்பக்கட்ட தரவுகள் காட்டுகின்றன.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 25 வீதமான 9.6 மில்லியன் பேரே வாக்களித்திருப்பதாக சுயாதீன தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இது உறுதி செய்யப்பட்டால் ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களை விடவும் குறைவான வாக்குப் பதிவு இடம்பெற்ற தேர்தலாக இது பதிவாகும்.

போராட்டக் குழுக்களின் குண்டு தாக்குதல்கள் மற்றும் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலேயே இந்தத் தேர்தல் இடம்பெற்றது.

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆப்கானிஸ்தானில் முதலாவது தேர்தலின் வாக்குப் பதிவு 70 வீதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு தேர்தலில் இந்த எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக வீழ்ச்சி அடைந்த நிலையில் 2014 ஆம் ஆண்டின் முதல் சுற்று வாக்குப் பதிவு இரட்டிப்பானது.

வாக்குச் சாவடிகள் மற்றும் தேர்தல் பேரணிகள் மீது தாக்குதல் நடத்துவதாக தலிபான்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை