அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின விளையாட்டு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை அல்- – அர்சத் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின விளையாட்டு விழாவொன்று பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பிரதி அதிபர் எம்.அபூபக்கர் தலைமையில் இடம்பெற்றது.

சிறுவர் தின அறிமுகம்- மாணவர்களுக்கு இனிப்புப் பொதிகளை வழங்கி வைத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து சிறுவர் தின விளையாட்டு விழா ஆரம்பமானது

தரம் –1 முதல் தரம் –13 வரையிலான ஆண்-பெண் மாணவர்களை உள்ளடக்கிய தனித்தனி விநோத விளையாட்டுக்கள் இடம்பெற்றன

பந்து சேகரித்தல், பலூன் உடைத்தல், தடைதாண்டல் ஓட்டம், கயிறு அடித்து ஓடுதல், வினோத பந்து மாற்றுதல், நீட்டிய கையில் யோகட் சாப்பிடுதல், சாக்கோட்டம், குழுநிலை நீர் நிரப்புதல் ஆகியவற்றுடன் அணிக்கு 11 பேர் பங்கேற்ற ஓவருக்கு 5 பந்து வீச்சுப் பிரதிகளைக் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிறிக்கெட் சுற்றுப் போட்டியொன்றும் இடம்பெற்றது. தரம் 10, 11, 12, 13 ஆகிய தரங்களைக் கொண்ட மாணவர்கள் கிறிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டனர். தரம் 11 அணி உலக சிறுவர் தின 2019 சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது.

விளையாட்டுக்களை வடிவமைத்ததுடன் பிரதம நடுவராகவும் எம்.ஜே.தாரிக் பணியாற்றினார். ஆசிரியர்களான எம்.ரஜீப்,ஏ.எம்.சிறாஜ் ஆகியோர் நடுவர்களாகத் தொழிற்பட்டனர். விழாக்குழுவின் தலைவைர் ஜெஸ்மி எம்.மூஸா நிகழ்வுகளின் ஒருக்கிணைப்பாளராகச் செயற்பட்டார்.

(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை