மகாத்மா காந்தியின் அகிம்சையை போதிக்க இந்திய தூதரகம் என்றும் துணையிருக்கும்

மகாத்மா காந்தியின் அகிம்சையை போதிப்பதற்கு இந்திய தூதரகம் என்றும் துணையாக இருக்கும் என கிளிநொச்சியில் இடம்பெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்வில் யாழ். இந்திய பதில் துணைத்தூதுவர் தெரிவித்தார். குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அகில இலங்கை காந்தி சேவா சங்கமும் கிளிநொச்சி காந்தி சிறுவர் இல்லமும் இணைந்து காந்தி ஜெயந்தி தின விழாவினை கொண்டாடினர். கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள காந்தி சிறுவர் இல்ல வளாகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பான்ட் அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதை அடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மங்கள விளக்கேற்றப்பட்டதை அடுத்து காந்தி கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதரகத்தின் பதில் துணைத்தூதுவர் ஆர்.பக்ரா, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், மதுரை காந்தி மியூசியத்தை சேர்ந்த மு.சீ.தேவதாஸ் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இம்மாதத்திற்கான காந்தீயம் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், காந்தி ஜெயந்தி தின போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்களிற்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பரந்தன் குறூப் நிருபர்

Fri, 10/04/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக