அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியன்

அட்டாளைச்சேனை எவடொப் விளையாட்டுக் கழகம் நடாத்திய, அணிக்கு எட்டுப்பேர், மட்டுப்படுத்தப்பட்ட 5 ஓவர் பந்துவீச்சுக்களைக் கொண்ட மின்னொளிகிரிக்கெட் சுற்றுப் போட்டியில், அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு, வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப் பரிசினைப் பெற்றுக் கொண்டது.அட்டாளைச்சேனை எவடொப் விளையாட்டுக் கழகத் தலைவவர் எம்.எச்.ஹமீட் தலைமையில், அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், சுமார் 48 முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்குபற்றின.

இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழக அணியினரும், அட்டாளைச்சேனை எவடொப் விளையாட்டுக் கழக அணியினரும் மோதிக் கொண்டனர். முதலில் துடுப்பாடிய அட்டாளைச்சேனை சோபர் கழக அணியினர் 5 ஓவர்கள் நிறைவில் மொத்தம் 70 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்குத் துடுப்பாடியஅட்டாளைச்சேனை எவர்டொப் அணியினர் 45 ஒட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.

இச்சுற்றுப் போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட, அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழக அணியினர் வெற்றிக் கிண்ணத்துடன், ரூபா 30 ஆயிரம் பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இரண்டாமிடம் பெற்ற அட்டாளைச்சேனை எவடொப் விளையாட்டுக் கழக அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் ரூபா 20 ஆயிரம் பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டது. சுற்றுப்போட்டி அனுசரணையாளர்கள், விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Fri, 10/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக