பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் பங்களிப்புக்கு லேக்ஹவுஸ் நிறுவனம் கௌரவிப்பு

சண்டே ஒப்சேர்வர் மொபிடெல் வருட பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் விழாவை 41 வருடங்களாக வெற்றிகரமாக நடத்துவதற்கு பெற்றுக்கொடுத்த பங்களிப்பை கௌரவிக்கும் முகமாக இலங்கை படசாலை கிரிக்கெட் சங்கத்தின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக நிதியுதவியை வழங்க லேக்ஹவுஸ் முகாமைத்துவப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்விருது வழங்கும் விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக சில வருடங்களுக்கு முன்னர் புதிய கணனியும் அச்சு இயந்திமும் கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்கப்பட்டதோடு இம்முறை நிதியுதவி வழங்கப்பட்டது.

தினந்தோறும் மற்றும் வாரந்தோறும் மும்மொழிகளிலும் வெளிவரும் லேக்ஹவுஸ் பத்திரிகை வலையமைப்பு இப்பணியை தொடர்ந்து செய்ய படசாலைகள் கிரிக்கெட் சங்கத்துடன்ன் இணைந்து செயல்பட எதிர்பார்த்துள்ளது.

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை