கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான கராத்தே போட்டி

ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான கராத்தே சுற்றுப் போட்டி அண்மையில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாசாலை ) களுவாஞ்சிகுடி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட 25 சங்கங்களிலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

14, 15, 16, 17, 21 வயதிற்குட்பட்ட மற்றும் 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான காத்தா, குமித், காத்தா குழுப் போட்டிகளும், 6 தொடக்கம் 13 வயதுப்பிரிவினருக்கான போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த போட்டியில் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவர் முகம்மத் இக்பால் பிரதிநிதித்துவம் செய்கின்ற International Martial arts Association (IMA) சார்பாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழகம் சார்பாகவும் கலந்துகொண்ட மாணவர்கள் 23 தங்கப் பதக்கங்களையும் , 17 வெள்ளிப்பதக்கங்களையும் , 12 வெண்கலப்பதக்கங்களுமாக மொத்தம் 52 பதக்கங்களையும் பெற்று தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் இவ்வருடம் டிசம்பர் மாதம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவர் முஹம்மட் இக்பால் தெரிவித்தார்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

Sat, 10/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை