கோட்டாபய ஜனாதிபதியானதும் அறுவக்காட்டில் குப்பை கொட்டுவது நிறுத்தப்படும்

நாம் ஆட்சிக்கு வந்ததும் புத்தளம் அறுவக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் உடனடியாக நிறுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை ஆதரித்து மதுரங்குளி கணமூலையில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன் (அன்சார்) தலைமையில் சனிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு குப்பை விவவகாரம் புத்தளம் மக்களிடையே பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. புத்தளத்திற்கு பிரச்சார நடவடிக்கைகளுக்காக வருவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை சந்தித்து இந்த குப்பை விவகாரம் தொடர்பில் பேசினேன். உண்மையில், இந்த திட்டமானது மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்குள்ள வீதிகள் உடைந்திருக்கிறது. சூழலுக்கும், உயிரினங்களுக்கும் இது பாரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இதுபற்றி கோட்டாவின் கவனத்திற்கு

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை