நுகேகொடை மஹாமாயா மகளிர் வித்தியாலயம் வெற்றி

பாடசாலைகளுக்கிடையிலான கரம் சுற்றுப் போட்டி

இலங்கை கரம் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான அனைத்து முத்தரப்பு நிலைகள் உள்ளிட்ட 15 மற்றும் 17 வயதின் கீழ் ஒற்றையர் மற்றும் 17 வயதின் கீழ் இரட்டையர்களுக்கான கரம் சுற்றுப் போட்டிகளில் நுகேகொடை மஹாமாயா மகளிர் வித்தியாலயம் அனைத்து வெற்றிக் கிண்ணங்களையும் வெற்றி பெற்றுக் கொண்டன.

15 வயதுக்குட்பட்ட ஒற்றையர் போட்டியின் வெற்றியாளரான நுகேகொடை மஹாமாயா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தேஷானி கௌசல்யா, 17 வயதின் கீழ் இரட்டையர்களுக்கான போட்டியிலும் யெஷானி கௌசல்யாவுடன் இணைந்து விளையாடி வெற்றி பெற்றதோடு, 19 வயதின் கீழ் ஒற்றையர் போட்டியின் வெற்றியாளரான நுவந்திகா சஞ்ஜீவனி, 21 வயதின் கீழ் இரட்டையர்களுக்கான போட்டியிலும் தருஷி ஹிமாஹன்ஷிகாவுடன் இணைந்து விளையாடி வெற்றி பெற்றார்.

இந்தச் சுற்றுப்போட்டிகள் கடந்த செம்தெம்பர் 28ம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 20ம் திகதி முடிவடைந்தது. இதில் ஐந்து வயதுப் பிரிவுகளின் கீழ் சுமார் 14 போட்டிகள் இடம்பெற்றதோடு நாடு முழுவதிலுமிருந்து சுமார் 650 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

உலக சாம்பியனான நிஷாந்தா பெர்னாண்டோவின் மகன் ஐந்து வயதுடைய மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வோல்ஸ் கல்லூரியின் மாணவன் தேவிரு நுஹான் பெர்னாண்டோ இந்தச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டிருந்ததோடு அவர் இரண்டு சுற்றுக்களில் வெற்றி பெற்றார்.

ஆண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர்களுக்கான போட்டிகளில் கண்டி சில்வெஸ்டர் கல்லூரி, கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி, நுகேகொடை சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரி, மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப் படை என்பன தலா ஒவ்வொரு வெற்றிக் கிண்ணங்களை வெற்றி கொண்டன.

முடிவுகள் -

13 வயதின் கீழ் ஆண்கள்

ஒற்றையர்

சம்பியன்: நயனா தனஞ்ஜய,

கண்டி சில்வெஸ்டர் கல்லூரி

(24/16)

ரன்னர் அப்: அப்துல் ஹாலிக்,

கண்டி சில்வெஸ்டர் கல்லூரி

மூன்றாமிடம்: சுனேத் மதுஷான்,

மொரட்டுவ பிரின்ஸ் ஒப்

வேல்ஸ் கல்லூரி (25/18)

13 வயதின் கீழ் பெண்கள்

ஒற்றையர்

சம்பியன்: ஸைனி இமாயா,

நுகேகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம் (25/06)

ரன்னர் அப்: நெத்திமி திலங்கா,

கண்டி உயர்தர பாடசாலை

மூன்றாமிடம்: ஸைனி விஹாரி,

நுகேகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம் (25/16)

15 வயதின் கீழ் ஆண்கள்

ஒற்றையர்

சம்பியன்: மலிக சீ.

பெர்னாண்டோ, கல்கிஸ்ஸை

சென் தோமஸ் கல்லூரி

(25/18, 25/22)

ரன்னர் அப்: வஜிர ஹர்சன,

வாரியபொல ஸ்ரீ ஞானோதயா

வித்தியாலயம்.

மூன்றாமிடம்: நிஷான் மர்தீனு,

கந்தானை தி மெஷானைட்

கல்லூரி (25/04)

15 வயதின் கீழ் பெண்கள்

ஒற்றையர்

சம்பியன்: தேஷானி கௌசல்யா,

நுகேகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம்

(25/16, 25/08)

ரன்னர் அப்: - லக்ஷிகா ஆகர்ஷணி,

நுகேகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம்

மூன்றாமிடம்: லக்ஷிகா ரசாஞ்ஜலி,

நுகேகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம் (25/18)

17 வயதின் கீழ் ஆண்கள்

ஒற்றையர்

சம்பியன்: அயேஷ் மதுசங்க,

நுகேகொடை சென் ஜோன்ஸ்

கல்லூரி (25/04, 25/05)

ரன்னர் அப்: நடராஜன் சங்கனித்,

கொழும்பு றோயல் கல்லூரி

மூன்றாமிடம்: சுபாஷ் மதுரங்க,

மொரட்டுவ பிரின்ஸ் ஒப்

வேல்ஸ் கல்லூரி (25/08)

17 வயதின் கீழ் பெண்கள் ஒற்றையர்

செம்பியன்: நிபுணி தில்ருக்ஷி,

நுகேகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம்

(25/01, 25/09)

ரன்னர் அப்: மனுராஜி நிசன்சலா,

நுகேகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம்.

மூன்றாமிடம்: காயத்திரி நிசன்சலா,

நுகேகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம் (25/14)

19 வயதின் கீழ் ஆண்கள்

ஒற்றையர்

சம்பியன்: பீ.மதுஷன்,

யாழ்ப்பாணம் கொக்குவில்

இந்து கல்லூரி (25/16, 25/20)

ரன்னர் அப்: திசுறு தில்மித்,

கொழும்பு றோயல் கல்லூரி

மூன்றாமிடம்: மலிந்த சந்தருவன்,

நுகேகொடை சென் ஜோன்ஸ்

கல்லூரி (25/00)

19 வயதின் கீழ் பெண்கள்

ஒற்றையர்

சம்பியன்: நுவந்திகா சஞ்ஜீவனி,

நுகோகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம்

(25/17, 25/22)

ரன்னர் அப்: ஹிருஷி

மல்ஷாணி, நுகேகொடை

மஹாமாயா மகளிர்

வித்தியாலயம்.

மூன்றாமிடம்: ஈ. திசாந்தி,

யாழ்ப்பாணம் கொக்குவில்

இந்து கல்லூரி (25/02)

21 வயதின் கீழ் ஆண்கள்

ஒற்றையர்

சம்பியன்: சுராஜ் மதுவந்த,

இலங்கை இராணுவம்.

(25/07, 25/13)

ரன்னர் அப்: கவிந்து பெத்தும்,

இலங்கை இராணுவம்.

மூன்றாமிடம்: தினேத் துலக்ஷன்,

இலங்கை விமானப் படை,

(25/20)

21 வயதின் கீழ் பெண்கள்

ஒற்றையர்

சம்பியன்: தருஷி ஹிமாஹன்சிகா,

நுகோகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம்

(25/13, 25/13)

ரன்னர் அப்: கௌசல்யா விதானகம,

கொழும்பு தேவி பாலிகா

வித்தியாலயம்.

மூன்றாமிடம்: மாசா நிர்மாணி,

நுகேகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம் (25/15)

17 வயதின் கீழ் ஆண்கள்

இரட்டையர்

சம்பியன்: சுபாஷ் மதுரங்க /

சுனேத் மதுஷான், மொரட்டுவ

பிரின்ஸ் ஒப் வோல்ஸ் கல்லூரி.

(17/25, 25/02, 25/15)

ரன்னர் அப்: தரிந்து தில்ஷான் /

சஜீவ லக்ஷான், வாரியாபொல ஸ்ரீ

ஞானோதய வித்தியாலயம்.

மூன்றாமிடம்: வஜிர ஹர்ஷன /

எஷான் மாலிங்க, வாரியாபொல

ஸ்ரீ ஞானோதய வித்தியாலயம்.

17 வயதின் கீழ் பெண்கள்

இரட்டையர்

சம்பியன்: யெசானி கௌசல்யா /

தேஷானி கௌசல்யா,

நுகோகொடை மஹாமாயா மகளிர்

வித்தியாலயம் (25/06, 25/04)

ரன்னர் அப்: மனுராஜி நிசன்சலா/

காயத்திரி நிசன்சலா,

நுகோகொடை மஹாமாயா

மகளிர் வித்தியாலயம்.

மூன்றாமிடம்: தஸ்மிலா காவிந்தி/

நிபுணி தில்ருக்ஷி, நுகேகொடை

மஹாமாயா மகளிர்

வித்தியாலயம் (25/04)

21 வயதின் கீழ் ஆண்கள்

இரட்டையர்

சம்பியன்: தினேத் துலக்ஷா/

கவீன் நிம்நெத், இலங்கை

விமானப் படை (25/18, 25/00)

ரன்னர் அப்: பவந்தா பன்சிலு /

மலிந்த சந்தருவன், நுகேகொடை

சென் ஜோன்ஸ் கல்லூரி.

மூன்றாமிடம்: சுராஜ் மதுவந்த /

கவிந்து பெத்தும், இலங்கை

இராணுவம் (25/14)

21 வயதின் கீழ் பெண்கள்

இரட்டையர்

சம்பியன்: தருஷி ஹிமாஹன்சிகா/

நுவந்திகா சஞ்ஜீவனி,

நுகேகொடை மஹாமாயா மகளிர்

வித்தியாலயம் (25/06, 25/00)

ரன்னர் அப்: ஆர். பவதாரணி /

ஈ. திசாந்தி, யாழ்ப்பாணம்

கொக்குவில் இந்து கல்லூரி

மூன்றாமிடம்: மாசா நிர்மனி /

ஹிருஷி மல்சானி, நுகோகொடை

மஹாமாயா மகளிர்

வித்தியாலயம் (25/08)

புத்தளம் விஷேட நிருபர்

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை