ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர பெயர்களில் நிதி நிறுவனங்களில் கணக்குகளில்லை

சி.ஐ.டி. தெரிவிப்பு

நீதிமன்ற உத்தரவின் கீழ் 48நிதி நிறுவனங்களில் பரிசோதித்த போதிலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர்களின் பெயர்களிலோ அல்லது அவர்களது தேசிய அடையாள அட்டை இலக்கங்களிலோ வங்கிக் கணக்குகள் எதுவும் பேணப்படவில்லை என்று சி.ஐ.டி.யினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.  ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் விசாரணையின்  போதே சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர். 

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் தொடர்பாக நிதி அறிக்கைகள் இருப்பின் அது பற்றி நீதிமன்றத்துக்கு அறியத் தருமாறு 80வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் லங்கா ஜயரத்ன முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தார். 

சி.ஐ.டி.யினர் பி அறிக்கையின்படி பிரதம மத்திரியின் பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் அசிங்க ஜீவந்த கரவிட்டவிடம் இருந்து ஒரு அறிக்கையை பதிவு செய்து கொண்டதாக சி.ஐ.டி.கூறியுள்ளது. அந்த அறிக்கையின்படி பிரதி பொலிஸ்மா அதிபர் அஸங்க கரவிட்ட, பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிடமோ அல்லது விசேட அதிரடிப்படை பிரதி பொலிஸ் மா அதிபரிடமோ அல்லது பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்கோ ஏப்ரல் 20 அல்லது 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெறலாம் என்ற எந்தவொரு தகவலும் கிடைத்திருக்கவில்லை என்று கூறியிருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

Sat, 10/26/2019 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை