நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை-Weather Forecast-Rain

கொழும்பில் பிற்பகல் 2.00 மணி முதல் தொடர் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் தற்போது மழை பெய்து வருவதோடு, கொழும்பில் பிற்பகல் 2.00 மணி முதல் இவ்வாறு மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Sun, 10/06/2019 - 16:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை