அமெரிக்காவில் காட்டுத் தீயால் பல்லாயிரம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சென்ட்ரே என்ற பிரபலமான வட்டாரத்தில் எரிந்துகொண்டிருக்கும் தீயை அணைக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மூண்ட தீயின் காரணமாக வீடுகளைவிட்டு பலர் வெளியேற்றப்பட்டதுடன் பாடசாலைகளும் மூடப்பட்டன.

முக்கியமான நெடுஞ்சாலையில் அரம்பித்த தீ, பலமாக வீசிய காற்றின் காரணமாக அருகில் உள்ள பகுதிகளுக்கு வேகமாகப் பரவியது. சுமார் 240 ஹெக்டர் பரப்பளவுக்கு எரிந்த தீயால் கிட்டத்தட்ட 10,000 கட்டடங்களில் உள்ளவர்களைக் கட்டாயமாக வெளியேற்ற நேரிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சான் பிரான்ஸிஸ்கோவின் வட பகுதியில் பலத்த காற்றால் பரவிய மற்றொரு தீச் சம்பவத்தையும் முன்னிட்டு கலிபோர்னியா மாநில ஆளுநர், மாநிலம் முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். இதுவரை, 26,000 ஹெக்டர் அளவுக்குமேல் காட்டுத் தீ பரவியுள்ளது. அதில் 5 வீதம் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை