எமது பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றுபவர்கள் பெண்கள்

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க

இலங்கையில் தினமும் 631 கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன. இந்த நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களில் 70 வீதமான பெண்கள் உள்ளனர். ஆனால் 31 வீதமாக பெண்களுக்கே வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. இதனால் பெண்கள் மிகவும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

நல்லாட்சிக்கான தேசய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பெண்கள் மாநாடு காத்தான்குடியில் நேற்றுமுன்தினம் (29) காத்தான்குடி பீச்வே விடுதியில் இடம்பெற்றது. முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்துகையில், எமது பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றுபவர்கள் பெண்கள். தேயிலைத் தோட்டங்கள், ஆடைத்தொழில் சாலைகள், ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும் பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். ஆனால் அதற்கான மதிப்பை இழந்துள்ளனர்.

பொதுப்போக்குவரத்தில் 90 வீதம் பெண்கள் பயணம் செய்கன்றனர். இவர்களில் 70 சதவீதமான பெண்கள் பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

வடக்கு, கிழக்கு, தெற்கில் யுத்தம் காரணமாக பெண்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டனர்.பெருளவிலான விதவைகள் உருவாகினர். வடக்கில் மாத்திரம் 45,000 விதவைகள் உள்ளனர். உளவியல் ரீதியாக பொருளாதார ரீதியதாக பாரிய இன்னல்களைப் பெண்கள் அனுபவிக்கின்றனர். இவர்களுக்கான புதியதொரு இலங்கையை உருவாக்க வேண்டும்.

71 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சியாளர்கள் ஏமாற்றியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியூடாகப் பயணித்து புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வரவேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை