டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகின்றது.

இந்த நிலையில், ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்து வீச்சார்களின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்கள்

இந்த பட்டியலில், அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ், 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

தென்னாபிரிக்காவின் கார்கிஸோ ரபாடா, 828 புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, 827 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் ஜேஸன் ஹோல்டர் 814 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்காவின் வெர்னொன் பிளெண்டர், 811 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் எண்டர்சன் 798 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்தின் ட்ரென்ட் போல்ட், 795 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்தின் நெய்ல் வாக்னர், 785 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் கெமார் ரோச் 780 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை