ஸாஹிரா முன்னாள் கால்பந்து வீரர்கள் ஏற்பாட்டில் முதலாவது மாஸ்டர்ஸ் கால்பந்து போட்டி

கொழும்பு ஸாஹிரா முன்னாள் கால்பந்து வீரர்கள் தங்கள் 'பேட்டில் ஆஃப் தி மாஸ்டர்ஸ் 2019' ஆரம்ப கால்பந்து போட்டியை 2019 இம்மாதம் 27 காலை 8.00 மணி முதல் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்.

127ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட கொழும்பு ஸாஹிரா கல்லூரி பாடசாலை கால்பந்தின் முன்னோடிகளில் ஒன்றாகும்,மேலும் ஆரம்பத்தில் இருந்தே விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது,பலதேசிய வீரர்களை தேசிய அணிக்கு உருவாக்குகிறது. ஸாஹிரா முன்னாள் கால்பந்து வீரர்கள் அணி 2008 ஆம் ஆண்டில் உற்சாகமான பாடசாலையின் முன்னாள் கால்பந்து வீரர்களால் நிறுவப்பட்டது, இதில் பலர் தேசிய ஜெர்சியை அணிந்துள்ளனர். அன்று தொட்டு,வெளிநாட்டு சிரேஷ்ட அணிகளுடன் விளையாடுவதற்கு வருடாந்த பயணங்களை ஏற்பாடு செய்த தோடு மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் பல சந்தர்ப்பங்களில் போட்டிகளில் பங்கேற்பது உள்ளிட்ட வீரர்களிடையே விளையாட்டை வளர்க்கும் நோக்கில் சங்கம் பலதிட்டங்களை மேற்கொண்டுள்ளது.

ஸாஹிராவில் கால்பந்து என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக கலாசாரத்திற்குள் ஆழமாக பதிந்திருக்கும் ஒரு உணர்வு.

எனவே,முன்னாள் கால்பந்து வீரர்களின் பிணைப்பை ஒன்றிணைத்தல் மற்றும் வரவிருக்கும் இளம் கால்பந்து திறமைகளுக்கு அவர்களின் அனுபவத்தின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் ஊக்குவிக்கும் கருத்தாக்கத்துடன், இலங்கை கால்பந்தை மீண்டும் அங்கீகரிப்பதற்கானஒருமுயற்சியாக இந்தபோட்டி இருக்கும்.

போட்டியின் பிரதான அனுசரணையாளர்களாக ஸாஹிரா பழைய மாணவர்கள் சங்கம்,சவுதி அரேபியா கிளை மற்றும் இணை அனுசரணையாளர்களாக ஒக்ஸ்போட் குழும விரோ நிறுவனம் உள்ளது. இது 'இலங்கையில் கடந்த கால்பந்து திறமைக்கு மதிப்பு சேர்க்கவும்' என்ற முக்கிய நோக்கத்தின் கீழ் நடத்தப்படுகிறது.

இந்தபோட்டியினால் பெறப்படும் வருமானம் கல்லூரி மைதானத்தில் 4 டக் அவுட் (மாற்றுபெஞ்சுகள்) வழங்குவதன் மூலம் ஸாஹிரா கல்லூரியின் விளையாட்டு வசதியை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

போட்டியில் பங்கேற்கும் அணிகள்

ஸாஹிரா கல்லூரி

ரோயல் கல்லூரி

ஆனந்தா கல்லூரி

ஹமீத் அல்–ஹுசைனி கல்லூரி

புனித. பெனடிக்ட் கல்லூரி

டி மசெனோட் கல்லூரி

ஸாஹிரா கல்லூரி கம்பளை

புனித. ஹென்றி கல்லூரி யாழ்ப்பாணம்

ருசைக் பாறூக்

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை