துன்பங்கள் நீங்கி இன்பம் மிளிரட்டும்

துன்பங்கள் நீங்கி இன்பம் மிளிரட்டும்-Deepawali Greetings From Police Department

பொலிஸ் திணைக்களம் தீபாவளி வாழ்த்து
பாதுகாப்பு கடமையில் பொலிஸார்

வையத்துள் வாழ்வாங்கு வாழ துன்பங்கள் நீங்கி வாழ்வில் இன்பம் மிளிர்ந்திடவே தித்திக்கும் தீபத்திருநளை இன்புறக் கொண்டாடிடுவோம், என பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்,

இந்துக்களின் மிகமுக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகத் தீபாவளித் திருநாளானது, உலகிற்கு நந்நாளாக இருக்க வேண்டி துன்பம் என்னும் இருள் நீங்கி இன்பமெனும்  ஒளி பெறவே தீபங்கள் ஏற்றிக்கொண்டாடிட வேண்டியதன் பிரதிபலனாவே தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

இலங்கை பொலிசானது 153 வருட காலமாக தொடரும் செயற்பாட்டின் நற் பெருமையுடன் இந் நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் இனம் மதமொழி பேதமின்றி தங்களது உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்து சாந்தியும் சமாதானமும் நிறைந்த அமைதியான சூழலில் பயமின்றி வாழ்வதற்காக தனது அயராத சேவையினை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. அதற்கமைய சகல இனத்தவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முன்னுரிமை வழங்குவதில் முன்னோடியாக திகழும் இலங்கை பொலிஸ் இவ் வேளையில் இருள் நீக்கி ஒளி பிறக்கும் இனிய தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் தமிழ் மக்களும், ஒருங்கிணைந்து வாழும் எம் சமூகத்துடன் ஒன்று கூடி நல்லிணக்கத்துடனும் சமத்துவத்துடனும் பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டுமென பிரார்த்தித்து இனிய தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பிரதேசங்களிலும் பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அதிகளவிலான பொலிசார் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். அத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் இலங்கை பொலிஸாரின் அன்பான வேண்டுகோள் யாதெனில் பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை அவதானமின்றி வெடித்தல், மதுபானங்களை அருந்தி விட்டு மது போதையில் வாகனம் செலுத்துதல் போன்றவற்றை முற்றாக தவிர்த்து அதன் மூலமாக ஏற்படும் திடீர் விபத்துக்கள் மற்றும் உயிர் சேதங்களிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

Mon, 10/28/2019 - 12:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை