கோட்டாபயவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக வேண்டும்

மேல் மாகாண ஆளுநர் முஸம்மில்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அழைப்பு விடுத்தார்.

கல்முனையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில், கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார், அவரின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும்.

அவர் எந்தவொரு பாகுபாடும் இன்றி அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்யக்கூடிய எண்ணம் கொண்டவர் .

'நாட்டின் அனைத்து சமூகங்களும் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என கூறினார். அமைச்சர் பட்டாலி சம்பிகா ரணவக்க போன்ற அரசியல்வாதிகள் புனித குர்ஆனிலிருந்து தவறான வியாக்கியானங்ளை வழங்குவதன் மூலம் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே ஒரு பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

காலி முகத்திடலிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கிய சஜித் பிரேமதாசாவின் முதல் கூட்டத்தில் எந்தவொரு முஸ்லிம் தலைவருக்கும் உரை நிகழ்த்த வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

அனுராதபுரத்தில் நடந்த கோட்டாபய ராஜபக்க்ஷவின் முதல் கூட்டத்தின்போது முஸ்லிம் பார்வையாளர்கள் இல்லாத போதும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஒரு சில வீடுகளை கட்டியெழுப்புவது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதி அல்ல .

'தேசத்தின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த குறிக்கோளை கொண்ட ஒரு புதிய தலைவருக்கு மக்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என அவர் தெரிவித்தார்.

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை