அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை முறிவு

அணு ஆயுதக் களைவு தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முறிந்ததாக வட கொரியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் குறிப்பிட்டுள்ளார்.

“பேச்சுவார்த்தைகள் எமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இருக்கவில்லை. இறுதியில் அந்த சந்திப்பு முறிந்தது” என்று ஸ்டொக்ஹொமில் வட கொரிய தூதரகத்திற்கு வெளியே அந்நாட்டு தலைமை பேச்சுவார்த்தையாளர் கிம் மியொங் கில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தைக்காக வட கொரிய தூதுக்குழு கடந்த வியாழக்கிழமை ஸ்டொக்ஹோமை சென்றடைந்தது. எனினும் அமெரிக்கா பேச்சுவார்த்தை மேசைக்கு எதனையும் கொண்டுவரவில்லை என்று கிம் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஒருசில மாத காலமாக நீடித்த இழுபறிக்கு பின்னரே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்கா தனது பழைய நிலைப்பாடு மற்றும் நடத்தைகளில் மாற்றம் இன்றி இருப்பதால் இந்த பேச்சுவார்த்தை முழுமையாக முறிந்தது என்று வட கொரிய தலைமை பேச்சுவார்த்தையாளர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். எனினும் இதனை நிராகரித்திருக்கும் அமெரிக்கா, இந்த பேச்சுவார்த்தை, சிறந்ததாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை