பிரசார நடவடிக்ைககளை பொறுப்புடன் முன்னெடுங்கள்

சர்வதேச கண்காணிப்பாளர்கள் களத்தில்

சமவாய்ப்பு வழங்காவிட்டால் ஊடகங்கள்மீது நடவடிக்ைக

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளை இவர்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதால் சட்ட விதிகளை ஒழுங்காக பேணுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கட்சிகளின் செயலாளர்கள் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் நேற்று வலியுறுத்திக் கூறினார்.

தேர்தல் சட்டவிதிகளை பேணும் விடயத்தில் தொகுதி மட்ட அமைப்பாளர்கள், கிராமசேவகர் பிரிவு மட்டங்களில் சகல கட்சிகளும் உரிய அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

தேர்தல் ஜனநாயக முறையில் நடப்பதற்கு சகல தரப்புகளும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய நிலைமையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் போது இரவு நேரக் கூட்டங்களை

 

 மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் தேர்தல் விதிகளுக்கு அமையவே இருக்கவேண்டும். ஒழுங்குவிதிகள் மீறப்படுமானால் கடுமையான சட்டவிதிகள் எடுக்கப்படவேண்டி ஏற்படலாம். சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படவில்லையென்று முறைப்பாடுகள் வருமானால் வேட்பாளர்கள் சட்டச்சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாமென்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது இலத்திரனியல் ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக பிரதிநிதிகள் தலைவரிடம் முறையிட்டனர். இதுகுறித்து தாம் பல தடவைகள் ஊடகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் இலத்திரனியல் ஊடக பிரதானிகளுடன் பேசி அறிவுறுத்தல் பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வானொலி, தொலைக்காட்சிகள் செய்திகளை ஒலி, ஒளிபரப்பும் நேரங்களில் சம அளவில் வேட்பாளர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் பக்கசார்பாகவே சில இலத்திரனியல் ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன. தனியார் ஊடகங்கள் இதனை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இதுகுறித்து அவர்களுக்கு மீண்டும் அறிவுறுத்துவேன் என்றும் அரச இலத்திரனியல் ஊடகங்களுக்கும் ஆலோசனை வழங்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்து வரும் நாட்களில் ஊடகங்கள் ஒரு சரியான தளத்திற்கு வந்து நேர்மையாக செயற்படுமென்று நான் நம்புகின்றேன். வேட்பாளர்களுக்கும் இது குறித்து நான் அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம்

Wed, 10/23/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக