அறுவக்காடு குப்பை சேகரிக்கும் பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தம்; மக்கள் அச்சம்

அமைச்சு சந்தேகம்

புத்தளம், அறுவக்காடு குப்பை சேகரிக்கும் பிரிவில் திங்கட்கிழமை (07) இரவு பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரவு 9.05 இற்கும் 9.15 இற்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக கரைத்தீவு மற்றும் சேராக்குளி மக்கள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தால் அறுவக்காடு குப்பைத் திட்டப் பிரிவை அண்மித்த கரைத்தீவு மற்றும் சேராக்குளி ஆகிய கிராமங்களில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டதாகப் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

அறுவக்காடு குப்பைத் திட்டத்தில் முதன் முதலாக மீதென் வாயுவை எடுப்பதற்கான சோதனை நடவடிக்கைகள் நேற்றைய தினம் மேற்கொண்ட போது, அங்கிருக்கும் குழாய் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கசிவால் இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதுவிதமான உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை எனவும், குறித்த பகுதியில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் மிகவும் பாதுகாப்பான முறையில் வேலைத்தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அந்த அதிகாரி ௯றியுள்ளார்.

அத்துடன், நேற்றைய தினம் கொழும்பிலிருந்து அருவக்காடு குப்பை சேகரிக்கும் பிரிவுக்கு குப்பைகளை ஏற்றிக்கொண்டு வந்த 29 டிப்பர் வண்டிகள் மீண்டும் கொழும்புக்கே திருப்பி அனுப்பப்பட்டன. இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து, கரைத்தீவு மக்கள் வன்னாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக,மேல்மாகாண பெருநகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை