நீதியான தேர்தலுக்கு ஒத்துழையுங்கள்

வேட்பாளர்களிடம் உருக்கமான வேண்டுகோள்

வேட்பாளர் அதிகரிப்பால் செலவு, நிர்வாக பிரச்சினைகள்

வாக்குச் சீட்டு இரட்டிப்பு நீளம்

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு,பொலிஸ் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு மட்டுமன்றி சகல பிரஜைகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த ​தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கூடுதலான வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதால் செலவு மாத்திரமன்றி வாக்களிப்பு நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைப்பது, வாக்குப் பெட்டி இறக்குமதி செய்வது, கூடுதல் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது போன்ற பல பிரச்சினைகள் எழுவதாக குறிப்பிட்ட அவர் இதற்காக வேட்பாளர்கள் ஒத்துழைப்பை வழங்க ​வேண்டும் என்றும் கோரினார்.  

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான நேற்று வேட்பாளர்கள் முன்னிலையில் விளக்கமளித்த அவர் கடந்த தேர்தல் வாக்குச் சீட்டை விட இரட்டிப்பு நீளமான வாக்குச் சீட்டு அச்சிட வேண்டியுள்ளதாகவும் ஒரே சின்னத்தை இரண்டுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் கோரினால் உடன்பாட்டின் மூலமோ அல்லது சீட்டிலுப்பின் மூலமே சின்னம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

சிங்கள அகரவரிசைப்படி வாக்குச் சீட்டில் பெயர் உள்ளடக்கப்படும் எனவும் வேட்பாளர் விரும்பினால் தமது பெயர்களின் முதல் எழுத்துக்களை குறைக்க முடியும் என்றும் அவர் அறிவித்தார். தேர்தலுக்கு 4ஆயிரம் மில்லியன் ரூபா செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால் அதனை அதிகரிக்க நேரிட்டுள்ளது.

35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் கட்சிகள் சார்பில் 70 பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர். இதனை குறைக்க முடியுமாக இருந்தால் எமது பணிகளுக்கு சாதகமாக அமையும். வாக்களிப்பு நிலையங்களுக்கு தலா 2 ஊழியர்களை நியமிக்க வேண்டும் சில இடங்களுக்கு மூவரை நியமிக்க வேண்டும்.

கட்சி சார்பில் ஒரு நிலையத்திற்கு 175 பிரதிநிதிகள் வரை நியமிக்கப்படும். இதனை 100 ஆக குறைக்க ஒத்துழைக்குமாறு கோருகிறோம். இன்றேல் பெரிய மண்டபங்களை ஒதுக்க நேரிடும்.

 

தேர்தல் தொடர்பிலான உங்கள் ஆட்சேபனைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்வைக்க முடியும். 0112868212, 0112868214, 0112868217 ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கோ 0112862529 எனும் பெக்ஸ் இலக்கத்திற்கோ 0719160000 எனும் இலக்கத்தினூடாக வட்ஸ்அப், வைபர் மூலமோ எமது பேஸ்புக் கணக்கிற்கோ முறைப்பாடுகளை செய்யலாம் என்றும் அவர் கூறினார். (பா)

குறிப்பிடத்தக்கது.(பா)

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை