ராஜபக்ஷ கோட்டையான அம்பாந்தோட்டையிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும்

ராஜபக்ஷவினர்களின் கோட்டையென அவர்களால் கூறப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்தையும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிக்கொள்ளுமென பிரதி அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஐ.தே.கவின் அம்பாந்தோட்டை செயற்குழுக் கூட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளூராட்சிமன்ற மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டதை போன்று கடந்த காலத்தில் கட்சியைவிட்டு வெளியேறியிருந்தவர்களும் கட்சியின் செயற்பாடுகளில் கலந்துகொள்ளாதவர்களும் மீண்டும் இணைந்துள்ளமையால் இத்தேர்தலில் அதிவிசேட வெற்றியை சஜித் பிரேமதாச பெற்றுக்கொள்வார்.

கட்சியைவிட்டு விலகியிருந்தவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளமை மிகப்பெரிய பலமாகும்.

பொதுஜன பெரமுனவில் இருந்து பலர் விரைவில் எம்முடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.

Mon, 10/07/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக