அமெரிக்க உளவாளிக்கு ஈரான் மரண தண்டனை

அமெரிக்காவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஈரானில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதோடு இதே குற்றச்சாட்டில் மேலும் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நீதித்துறை பேச்சாளர் ஒருவர் நேற்று வெளியிட்ட இந்த தகவலில், பிரிட்டன் நாட்டுக்காக உளவு பார்த்த நான்காமவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஈரானின் நீதித்துறை செய்தி இணையதளமான மீசானுக்கு கொலாம் ஹொஸைன் இஸ்மைலி என்ற பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

“அமெரிக்காவுக்காக உளவு பார்த்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இதற்கு எதிராக மேற்முறையீடு செய்யலாம்” என்று இஸ்மைலி குறிப்பிட்டார்.

ஈரான் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு கடும் தண்டனைகளை விதித்து வருகிறது. கடந்த ஓக்ஸ்ட் மாதம் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மூவருக்கு 10 மற்றும் 12 ஆண்டகள் சிறைத் தண்டனை விதித்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை