இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் மீது கத்திக்குத்து

இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் விராந்தோ கத்திக் குத்துத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

அவர் ஜாவா தீவில் உள்ள பாண்டெகலாங் நகருக்கு சென்றபோது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் விராந்தோ தமது காரைவிட்டு இறங்கும்போது கத்தி ஏந்திய ஆடவரால் தாக்கப்பட்டுக் கீழே சரிகிறார். பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஐ.எஸ் பயங்கரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் என்று அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் நம்புகின்றனர். 72 வயது விராந்தோ 2016 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை