சிறுபான்மை சமூகம் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உறுதிப்படுத்த வேண்டும்

ஐ.ஒ. தேர்தல்  கண்காணிப்பு குழுவிடம்  அமைச்சர்  றிஷாட் வலியுறுத்து

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமின்றி வாக்களிப்பதை தேர்தல் கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில் வாக்களிப்பதை உறுதி செய்வதுடன் அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது அவதானத்தை

கூடியவரை செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கண்காணிப்பாளர்களாக ஈடுபட வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ஆய்வாளர் மாரு பொலாண்ட் தலைமையிலான குழுவினர் (29) அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே அமைச்சர் ரிஷாத்பதியுதீன் இவ்விடயத்தை எடுத்துரைத்தார்.

அவர் மேலும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளதாவது, கட்சியொன்றின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் சிலர், சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்தும் தொனியிலும், கஷ்டங்களை எதிர்கொள்ளவேண்டி நேரிடும் என்ற எச்சரிக்கை தொனியிலும் உரையாற்றிவருகின்றனர்.

சுயாதீனமாக வாக்களிக்கும் வாக்காளர்களை அதிலிருந்து தடுக்கும் அல்லது ஒதுக்கும் செயலாகவே இதனைக் கருதுகின்றோம்.ஜனநாயக நாடொன்றில் வாக்களிக்கும் சுதந்திரமென்பது மிகவும் முக்கியமானது. இதனை தடுப்பது என்பது மிகவும் பாரதுாரமானது. மக்களுக்காக ஆட்சிக்கு வருபவர்கள் தமது கொள்கை, எதிர்கால திட்டங்களைக் கூறி வாக்குக் கேட்பதே சிறந்த நடைமுறை.

இந்த தேர்தலில் எமது கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குகின்றது. இவரை முன்னிறுத்தியே எமது பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் நாம் பிரதிநிதித்திதுவப்படுத்தும் எமது கட்சிக்கு ஆதரவளிக்கும் வாக்காளர்களை பலவந்தப்படுத்தி அவர்களிடம் வாக்கைப் பெறும் பரப்புரைகள் செய்யப்படுகின்றன.

 

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை