ஜனநாயகத்தை மதிக்கும் த.தே.கூட்டமைப்பு பொருத்தமான தலைவரை தேர்ந்தெடுக்கும்

ஜனநாயகத்தை மதித்து அரசியல் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தங்களுக்கு பொருத்தமான கட்சியை தேர்ந்தெடுக்குமென நீதியமைச்சர் தலதா அத்துகோரல நேற்று தெரிவித்தார்.

பெளத்த மதகுருமாரை கொலை செய்த கருணா அம்மானுக்கு சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்க முடியுமாக இருந்தால் ஜனநாயக அரசியல் நடத்தும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலில் யாருடைய ஆதரவை பெற்றால்தான் என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றது போன்று குற்றச்செயல்களை மூடி மறைக்கவோ பொலிஸ் புத்தகத்தில் தவறான வாக்குமூலங்களை பதிவு செய்யவோ முடியாதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பலாங்கொடையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கென தலைமைத்துவம் உண்டு. இரா. சம்பந்தன் உரிய நேரத்தில் அதற்குரிய வேலைகளை முன்னெடுப்பார். அது குறித்து நாம் அலட்டிக்ெகாள்ளத் தேவையில்லை.

கருணா அம்மானுக்கு எமது கட்சி அமைச்சர் பதவி கொடுக்கவில்லையே.

இந்நிலையில் ஜனநாயக அரசியல் நடத்தும் ஐக்கிய தேசியக் கட்சி யாரின் ஆதரவை பெற்றுக்ெகாண்டால்தான் என்ன?

எமது கட்சி பெளத்த மதகுருமாரை கொலை செய்த கருணா அம்மான் போன்றவர்களுக்கு உப தலைவர் பதவி கொடுக்கவில்லை. பிள்ளையான் இன்று வரை சிறையில் இருப்பதற்கான காரணமும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் நாம் அவ்வாறு செய்வதில்லை. த.தே.கூ என்றும் ஜனநாயகத்தை மதித்து அரசியல் நடத்துமொரு கட்சி. அதனால் அவர்களுக்கு மிக பொருத்தமான தலைவரை அவர்கள் தெரிவு செய்வார்கள் என்றார்.

 

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை