றக்பி உலகக் கிண்ணம்: கொமர்ஷல் வங்கியின் கடனட்டை வைத்திருக்கும் இருவர் ஜப்பான் பயணம்

றக்பி விளையாட்டை நேசிக்கும் எந்தவொரு நபருக்கும் கனவாக அமையக்கூடிய வாய்ப்பொன்றை,கொமர்ஷல் வங்கியின் மாஸ்டர் கார்ட் கடனட்டை வைத்திருக்கும் இருவர் பெற்றுள்ளனர். ஜப்பானில் இடம்பெற்றுவரும் றக்பி உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் ஒன்று, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இவ்வாரயிறுதியில் யோகோ ஹாமாவில் இடம்பெறவுள்ள நிலையில், அனைத்துச் செலவுகளும் ஏற்கப்பட்டவகையில் இவர்களிருவரும் பயணிக்கவுள்ளனர்.

பிலியந்தலையைச் சேர்ந்த யு.பி. வசந்த பெரேரா,தெஹிவளையைச் சேர்ந்த திருமதி அநுராதா ஜயதிலக ஆகியோரே இவ்வாரத்துக்கான பரிசுகளை வென்றனர். றக்பி உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதிப் போட்டிக்கான நுழைவுச்சீட்டு, விசா கட்டணங்கள், சென்று திரும்புவதற்கான விமானப் பயணக் கட்டணங்கள்,ஹோட்டல் தங்குமிடம்,போக்குவரத்து ஆகியன உள்ளடங்கியதாக அவர்களுக்கான பரிசுப்பொதி அமைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் மாஸ்டர் கார்ட் கடனட்டையை வைத்திருந்து, இவ்வாண்டு ஏப்ரல் முதலாம் திகதிமுதல் ஜூன் 30ஆம் திகதி வரை, மாதாந்தம் சராசரியாக 25,000 ரூபாய்க்குக் கொள்வனவுகளை மேற்கொண்டோரிலிருந்து அதிர்ஷ்ட சாலிகள் தெரிவு செய்யப்பட்டனர். மாஸ்டர்கார்ட் நிறுவனத்தால் இலங்கையில் இந்த ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஒன்பதாவது றக்பி உலகக் கிண்ணமானது ஜப்பானில் இடம்பெற்று வருவதோடு,நவம்பர் 2ஆம் திகதியுடன் இது நிறைவுபெறுகிறது. இத்தொடரானது ஆசியாவில் முதன்முறையாக நடைபெறுகிறது.

Sat, 10/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை