ஒத்துழைப்பு வழங்குவதற்கு வெள்ளை மாளிகை மறுப்பு

டிரம்ப் மீதான விசாரணை:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விசரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.

இதனை “அடிப்படையற்றது” மற்றும் “சட்டமுறையற்றது” என்று ஜனநாயக கட்சி தலைவர்களுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப் மீது ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையின் மூவர் குழு விசாரணை நடத்தி வருகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக வரும் வாய்ப்பு உள்ள ஜோ பைடன் மீது விசாரணை நடத்த உக்ரைனை டிரம்ப் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டை கண்டறிவதற்காகவே அந்த விசாரணை நடத்தப்படுகிறது.

ஜனநாயக கட்சியின் மூவர் அடங்கிய குழுவின் தலைவரான அந்தக் கட்சி மூத்த உறுப்பினரும் பிரதிநிதிகள் சபை சபாநாயகருமான நான்சி பெலொசிக்கு வெள்ளை மாளிகை ஆலோசகர் பட் சிபொலோன் எட்டுப் பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த விசாரணை அடிப்படை நியாயத் தன்மை மற்றும் சட்ட முறையை மீறி இருப்பதாக அந்தக் கடிதத்தில் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2016 ஜனாதிபதி தேர்தல் முடிவை ஜனநாயக கட்சியினர் மாற்ற முயற்சிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை