பனங்காடு ஸ்ரீ நாககாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ நாககாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழாவின் தீமிதிப்பும், தீர்த்தோற்சவமும் நேற்று (13) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கணபதி ஹோமம் மற்றும் திருக்கதவு திறத்தலுடன் கடந்த 03ஆம் திகதி ஆரம்பமான அலங்கார உற்சவ பெருவிழாவானது 12ஆம் திகதி இடம்பெற்ற பாற்குடபவனி சங்காபிசேகம் மற்றும் அம்மனின் ஊர்வலத்துடனும்12ஆம் திகதி இடம்பெற்டற சக்தி மகா யாகம் நோர்ப்பு நெல் நேர்தல் ஆகிய கிரியைகளுடனும் நேற்று காலை இடம்பெற்ற பக்தி ததும்பும் தீமிதிப்பு மற்றும் தீர்த்தோற்சவத்துடனும் 20 ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறும்.

பனங்காடு தில்லையாற்றில் இடம்பெற்ற மஞ்சள் குளிக்கும் சடங்குடன் ஆரம்பமான தீமிதிப்பில் பெருந்திரளான இந்து,பௌத்த அடியவர்கள் கலந்து கொண்டனர்.இசை வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா வேண்டுதல் ஓசை வானலைகளில் மிதக்க ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என, ஆயிரக்கணக்கான மக்கள் தீயில் இறங்கி அம்மன் நேர்த்தியை நிறைவு செய்ததுடன் அருளையும் பெற்றனர். தொடர்ந்து தில்லையாற்றில் இடம்பெற்ற ஸ்ரீ நாககாளியம்மனின் தீர்த்தோற்சவத்திலும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

ஆலய தலைவர் க.கந்தையாபிள்ளை தலைமையில் நேற்று இடம்பெற்ற நாககாளியம்மன்ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழாவின் தீமிதிப்பு மற்றும் தீர்த்தோற்சவ கிரியைகளை ஆலய பிரதமகுரு சிவசக்தி உபாசகர் சிவஸ்ரீ வி நடராஜா ஆரம்பித்து வைத்தார்.

 

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை