தோப்பூரில் பெரும்போக நெல் விதைப்புக்கான ஏர்பூட்டும் விழா

தோப்பூர் கமநல சேவை நிலைய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரும்போக நெல் விதைப்புக்கான ஏர்பூட்டும் விழா புல்லாந்திக்குள வயல் வெளியில் நேற்று 08 ஆந் திகதி தோப்பூர் கமநல சேவை நிலைய பெரும்பாக உத்தியோகத்தர் எஸ்.நௌபர் தலைமையில் நடைபெற்றது.

தோப்பூர் கமநல சேவைப்பிரிவில் 5,000 இற்கும் அதிகமான ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நிலத்தைப் பண்படுத்துவோம் வளம்பெறுவோம் என்பதே இன்​ைறய நிகழ்வின் தொனிப்பொருளாகும்.

இந் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ்.புனித குமார் கலந்துகொண்டார்.

இதன்போது வயல் உழுது விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன், அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படுகின்ற உரமானியமும் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய அதிகாரிகள், சேதன உரத்தினை பயன்படுத்தி சூழலுக்கு நன்மை தரும் விதமாக பயிர்ச்செய்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்வுகளில் விவசாயப் போதனாசிரியர் மன்சூர், தோப்பூர் உப பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் நிசவுஸ், ஏனைய உத்தியோகத்தர்கள் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தோப்பூர் தினகரன் நிருபர்

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை