நிந்தவூரில் காட்டு யானைகள் அட்டகாசம்

நிந்தவூர் மாட்டுப்பளை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் தினமும் பல்வேறுபட்ட இன்னல்களை தாம் எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்திற்குள் நேற்று (02) அதிகாலை வேளையில் உட்புகுந்த காட்டு யானைகள் சில தென்னந்தோப்பொன்றிலிருந்த சுமார் பத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் பெறுமதி மிக்க மரம், செடி கொடிகள் சிலவற்றையும் துவம்சம் செய்துள்ளன. இதேவேளை இப்பகுதியில் இருந்த குடிசையினையும் இக்காட்டு யானைகள் தாக்கி அழித்துள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை அண்டிய பகுதியில் அண்மைக்காலமாக வருகை தரும் காட்டு யானைகளால் பல்வேறான சேதங்கள் இடம்பெற்று வருவதுடன், மாலை வேளையில் இப்பிரதேசத்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தினை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலப் பிரிவிற்குட்பட்ட அஷ்ரஃப் பகுதியில் அமையப் பெற்றுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ குப்பைகளை உண்பதற்காக வருகை தரும் யானைகளே இங்கு வருகை தருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்பினருக்கு பல முறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Thu, 10/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை