ஹிலாலியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி

மூதூர் அல் -– -ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹிலாலியன் பிரிமீயர் லீக் -2019 க்கான கிரிக்கெட் இறுதி சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கலந்து சிறப்பித்ததோடு வெற்றிபெற்ற அணியினருக்கு கேடயங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

பாடசாலை அதிபர் எம்.எல்.எம்.முபாரக் தலைமையில் கடந்த (14) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பழைய மாணவர்கள் பங்குபற்றிய சுமார் 18 அணிகள் கலந்து கொண்டதுடன். அணிக்கு 11 பேர்கொண்ட ஆறு ஓவர்கள் நிறைந்த சுற்றுப் போட்டியாகவும் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஜே.எம்.குசைதீன்,பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்..

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை