தென் மாகாண பாடசாலைகளில் பாதுகாப்பு தொடர்பில் பொய்ப் பிரசாரம்

நிதியமைச்சர் மங்கல சமரவீர  பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம்

பாடசாலைகளில் பாதுகாப்பு தொடர்பில் போலியான அச்சத்தை உருவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு சிலர் முயற்சித்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.இதை ஆராய்ந்து தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் மங்கல சமரவீர நேற்று முன்தினம் (22) பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கான காரணமாக அமைந்தது தென்மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஐ.எஸ்.ஆர்.பி. அபேரத்னவால் தென் மாகாண பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட கடிதமே இதற்கு காரணமாகும். அதிபர்கள், பெற்றோர்களை அழைத்து பாடசாலை சோதனை நடவடிக்கையில் ஈடுபடுமாறும் 23ஆம் திகதியிலிருந்து பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை நடத்தி பாடசாலை பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அதன் காரணமாக மாத்தறை மாவட்ட மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளதுடன் குழப்பமும் அடைந்துள்ளார்கள். இது தொடர்பாக நிதியமைச்சரால் தென்மாகாண ஆளுநர், ஜனாதிபதி செயலாளர், இரகசிய பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினரிடம் வினவிய போது அவர்கள் அவ்வாறான அவசர நிலைமை ஏற்படவில்லையென தெரிவித்துள்ளார்கள். அவ்வாறான அவசர நிலைமை காணப்பட்டால் மாகாண சபை பொது செயலாளரால் அனுப்பப்பட வேண்டிய கடிதம் உதவி கல்விப் பணிப்பாளர் ஒருவரின் கையெழுத்தில் அனுப்பியதன் மூலம் அரசியல் சூழ்ச்சி தொடர்பான சந்தேகம் எழுவதாக நிதியமைச்சர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால் ஜனாதிபதி தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வேலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியா என ஆராய்ந்து தேவையான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அக்கடிதம் மூலம் நிதியமைச்சர் கோரியுள்ளார். இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளதோடு இது போன்று பொய்ப் பிரசாரங்களை செய்த நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை