சிறுவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டி: காத்தான்குடிக் கல்விக் கோட்டம் முதலிடம்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பாடசாலை சிறுவர்களுக்கான மெய்வல்லுநர் விளையாட்டு விழா காத்தான்குடிக் கல்விக் கோட்டம் 30 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தினை பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பாடசாலை சிறுவர்களுக்கான மெய்வல்லுநர் விளையாட்டு விழா (28.09.2019) சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய கல்விக் கோட்டங்களை உள்ளடக்கி தனித்தனியாக இம் மெய்வல்லுநர் போட்டிகள் இடம் பெற்றன். இதன் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.

இவ் விளையாட்டு விழாவில் மூன்று கல்விக் கோட்டத்திலிருந்தும் 24 பாடசாலைகளைச் சுமார் 800 மாணவர்கள் இப் போட்டியில் பங்குபற்றினார்கள். இதில் தரம்3, தரம் 4, தரம் 5 ஆகிய அண்டுகளில் கல்வி கற்கும் மாணவர்களே பங்கு பற்றினார்கள்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் ஐ.எம்.இப்றாகீம் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எஸ்.உமர்மௌலானா கலந்து கொண்டார்.

இதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி றிஸ்மியா பானு காத்தான்குடி பிரதேசக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஜி.ஏ.ஹக்கீம் உட்பட ஏறாவூர் ஓட்டமாவடி பிரதேசக் கல்விப்பணிப்பாளர்கள் உதவிக் கல்விப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இதன் போது வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்விக் கோட்டங்களுக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் 2019ம் ஆண்டுக்கான சிறுவர் விளையாட்டு விழாவில் 36 புள்ளிகளைப் பெற்று காத்தான்குடிக் கல்விக் கோட்டம் முதலாவது இடத்தினையும் 30 புள்ளிகளைப் பெற்று ஏறாவூர் கல்விக் கோட்டம் இரண்டாவது இடத்தினையும் 17 புள்ளிகளைப் பெற்று ஓட்டமாவடிக் கல்விக் கோட்டம் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக் கொண்டது

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை