Header Ads

ஜனாதிபதித் தேர்தலை இரத்துச் செய்ய கோரிய மனு உச்ச மன்றில் தள்ளுபடி

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

மனுவை விசாரணைக்கு எடுப்பதற்குப் போதுமான சட்ட அடிப்படை இல்லை என்று கூறி மேற்படி மனுவை தள்ளுபடி செய்வதென உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்களான விஜித் மலல்கொட, பிரீதி பத்மன் சூரசேன மற்றும் காமினி அமரசேகர ஆகியோரைக் கொண்ட குழுமம் தீர்மானித்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி தேர்தல் ​ெதாகுதி ஏற்பாட்டாளரும் காலியின் முன்னாள் மேயருமான மெத்சிறி டி. சில்வா மேற்படி மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Sat, 10/05/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.