நியூசி. வீதியோர திரையில் ஒளிபரப்பான ஆபாச படம்

நியூசிலந்தின் ஒக்லந்து நகரிலுள்ள அசின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பெரிய கடையொன்றுக்கு வெளியிலுள்ள விளம்பரத் தொலைக்காட்சித் திரையில், ஆபாசப் படம் ஒளிபரப்பானதற்கு அந்த நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில், ஊழியர்கள் கடையைத் திறக்கும்வரை 9 மணி நேரம் ஆபாசப் படம் ஒளிபரப்பானதாக நியூசிலாந்து ஹரல்ட் பத்திரிகை தெரிவித்தது.

சிலர் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் மேலும் சிலர் நின்று அதனைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் சம்பவத்தை பார்த்தவர்களை மேற்கோள் காட்டி அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கணனிக் கட்டமைப்பை இணைய ஊடுருவிகள் ஊடுருவியதே அந்தத் தவறு நேர்ந்ததற்குக் காரணம் என்று, விளையாட்டுப் பொருட்களை விற்கும் அந்த நிறுவனம் குறிப்பிட்டது.

ஒக்லாந்தின் மத்திய பகுதியிலுள்ள கடைக்கு வெளியே இருந்த விளம்பரத் திரையில் மீண்டும் அத்தகைய தவறு நேராமலிருக்க, இணையப் பாதுகாப்பைக் கடுமையாக்கப் போவதாக அசின்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை