7 மாதங்களில் 14 உயரமான மலைகளுக்கு ஏறி சாதனை

ஏழு மாதங்களுக்குள் உலகின் 14 மிக உயரமான மலைச் சிகரங்களுக்கு ஏறி நேபாள நாட்டு மலையேறி ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை படைக்க எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

36 வயது நர்மலா புர்ஜா தனது 14 ஆவது மலைச்சிகரமாக நேற்று சீனாவில் உள்ள ஷிஷபக்மா மலை உச்சியை தொட்டார்.

அவர் தனது சாதனை பயணத்தை நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து மே மாதம் எவரெஸ்ட் மலைச் சிகரத்தை தொட்டார். அப்போது எவரெஸ்ட் மலை உச்சியில் நீண்ட வரிசையில் மலையேறிகள் காத்திருக்கும் அவரது புகைப்படம் உலகின் அவதானத்தை பெற்றது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் பாகிஸ்தானில் இருக்கும் நன்கா பர்பத் தொடக்கம் பிரோட் பீக் வரை ஐந்து மலை உச்சிகளை அடைந்தார்.

8000 மீற்றருக்கு மேற்பட்ட உயரம் கொண்ட உலகின் 14 மலை உச்சிகளுக்கு ஏரிய முந்தைய சாதனை படைக்க கிட்்டத்தட்ட எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டன. 1987 இல் ஜெர்சி குக்சா இந்த சாதனையை படைத்திருந்தார்.

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை