6வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை

பாசிலோனா கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி 6-வது முறையாக யூரோப்பியன் தங்க ஷூவை கைப்பற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆண்டுதோறும் யூரோப்பியன் தங்க ஷூ வழங்கப்படும்.

2018-19 பருவகாலத்தில் லா லிகாவில் பாசிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி 34 கோல்கள் அடித்து முதல் இடம் பிடித்தார். இதனால் அவருக்கு தங்க ஷூ வழங்கப்பட்டது. இத்துடன் மெஸ்சி 6 முறை தங்க ஷூ விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒட்டுமொத்தமாக நான்கு முறை தங்க ஷூவை வென்றுள்ளார்.

பிரான்ஸில் நடைபெற்றும் லீக் 1-ல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடும் கிலியன் மப்பே 33 கோல்கள் அடித்து நூலிழையில் விருதை தவறவிட்டார்.

Fri, 10/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை