சங்கிலியால் பிணைக்கப்பட்ட 67 மாணவர்கள் விடுதலை

வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய பாடசாலை விடுதி ஒன்றில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த 67 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏழு தொடக்கம் 40 வயது கொண்டவர்கள் இங்கு சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முகம்கொடுத்ததாக கூறப்படுகிறது.

அண்டைய அடுனா மாநிலத்தில் இதேபோன்ற பாடசாலை விடுதி ஒன்றில் இருந்து கடந்த மாதம் 300க்கும் அதிகமான மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அல்மஜ்ரிஸ் என அழைக்கப்படும் இஸ்லாமிய உறைவிடப் பாடசாலைகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு நைஜீரியாவில் பிரபலமானதாகும்.

மனிதாபிமானமற்ற முறையிலும் இழிவான வகையிலும் ஆடவர்கள் மற்றும் சிறுவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் இரு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பாடசாலையில் 300க்கும் அதிகமான மாணவர்கள் இருந்திருப்பதோடு பொலிஸார் வரும் முன்னர் பலர் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை