ஜப்பானை சூறையாடிய புயல்: உயிரிழப்பு 66ஆக அதிகரிப்பு

ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்திருப்பதோடு கட்டட இடிபாடுகள் மற்றும் சேற்று நிலங்களுக்கு இடையே மீட்பு நடவடிக்கைகள் நேற்றும் இடம்பெற்றன.

ஆயிரக்கணக்கான வீடுகள் மீன்சாரம் இன்றி காணப்படுகின்றன.

மத்திய மற்றும் கிழக்கு ஜப்பானை சூறையாடிய ஹகிபிஸ் புயலில் 66 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு தேசிய ஒளிபரப்பு சேவையான என்.எச்.கே குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து 15 பேர் காணாமல்போயிருப்பதோடு 200 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

சுமார் 138,000 வீடுகள் நீர் வசதிகள் இன்றியும் 24,000 வீடுகள் மின்சாரம் இன்றியும் காணப்படுகின்றன.

டோக்கியோவின் வடக்கே புகுஷிமா மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு அங்குள்ள அபுகுமோ நதி பெருக்கெடுத்து 14 இடங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வெள்ள நீரில் சிக்கி தாய் மற்றும் மகன் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயல் தாக்கத்தால், 10,000க்கும் அதிகமானோர் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை