5 கட்சிகளும் முடிவெடுத்தால் போட்டியிலிருந்து உடன் விலகுவேன்

வடக்கில் 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணைந்து தயாரித்துள்ள 13 நிபந்தனைகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொள்கிறதோ, 5 கட்சிகளும் அதில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்றதோ அன்று ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து நான் உடனடியாக விலகுவேன் என ஜனாதிபதி வேட்பாளரான சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், 13 நிபந்தனைகள் கடுமையானவையென பிரதான கட்சிகள் தெரிவிக்குமாயின், நான் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்க் கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் களமிறங்காத காரணத்தால், சுயமாக சில முடிவுகளை எடுக்கக் கூடிய உரிமை எனக்கு உள்ளது. 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதாக வேட்பாளர் ஒருவர் ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி வழங்கினால் நான் ஜனாதிபதி வேட்பாளர்

கூடி இறுதி முடிவை எடுக்க வேண்டுமென அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அதன் பிரகாரம் இன்று முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்துவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் கூடவுள்ளதாக கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லையென இதுவரை அறிவிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை