சஜித் ஜனாதிபதியானால் மேலும் 50,000 வீடுகள் வழங்க இந்தியா தயாராக இருக்கிறது

இலங்கையில் ஊழலற்ற ஆட்சி ஒன்றினை கொண்டு செல்லக் கூடிய சஜித் பிரேமதாச போன்ற ஒருவர் ஆட்சிக்கு வருவாராக இருந்தால் இலங்கையில் மேலும் 50,000 வீடுகளை அமைப்பதற்கான நிதியினை இந்தியா அரசாங்கம் வழங்க தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரசார கூட்டம் நேற்று ஹற்றனில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள்

மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மகிந்த ராஜபக்சவிடம் காணப்படுவது இனபேதம் மாத்திரமே. நாட்டில் யுத்தம் முடிந்த பின்பு மக்களின் மனதில் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் மீது ஆதரவாக இருப்பதை போல் எவ்வளவு பொய் கூற முடியுமோ அவ்வளவு பொய்களை கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச கடந்த காலங்களில் மலையக மக்களை ஏமாற்றி உள்ளார். இந்த நாடு ராஜபக்சாக்களின் நாடு என்பதை காட்டிக்கொண்டு ஹிட்லர் போன்றவர்களின் ஆட்சியை முன்னெடுப்பது தான் அவர்களின் நோக்கம் .

நாம் வௌிநாடுகளுக்கு சென்ற போது உங்கள் நாட்டு தலைவர் யார் என்று எம்மிடம் கேட்ட போது மகிந்த ராஜபக்ச என்று கூறினோம். நாட்டின் பாதுகாப்பு செயலாளர் யார் என்று கேட்டனர் அதற்கு கோட்டாபய ராஜபக்ச என்று தெரிவித்தோம். நாட்டு பொருளாதார அமைச்சர் யார் என்று கேட்டனர். அதற்கு நாங்கள் பசில் ராஜபக்ச என்று கூறினோம். நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் யார் என்று கேட்டனர் சமல் ராஜபக்ச என்று கூறினோம்.

உங்கள் நாட்டின் முதலமைச்சர் யார் என்று கேட்டனர் சசிந்திர ராஜபக்ச என்று கூறினோம்.

அதேபோன்று இளம் உறுப்பினராக நாமல் ராஜபக்சவும் இருக்கிறார் என்று கூறினோம். அதற்கு அவர்கள் உங்கள் நாட்டில் ஏனைய தலைவர்களும் ராஜபக்சகர்களா என கேள்வி எழுப்பினார்கள்.

 ஹற்றன் சுழற்சி நிருபர்

Mon, 10/07/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக