5000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த பிரான்ஸ் நிதி நிறுவனம் உதவி

இலங்கையில் புதிதாக 5000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பிரான்சின் நிதி நிறுவனமான AFD நிறுவனம் இலங்கை வங்கிக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நுண் கடன் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு தொழில் தொடர்பான அனுபவங்களை வழங்குவதுடன் துறையின் வளர்ச்சிக்கும் முயற்சியாளர்கள் நிதியை பெற்றுக்கொள்வதில் எதிர் நோக்குகின்ற சிரமங்களை தீர்க்கும் வகையில்  இந்த முதலீடு மேற்கொள்ளப்படுவதாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உதவுவதாக இது அமையும். இந்த நிதியுதவி மூலம் இலங்கையில் புதிதாக 5000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.(ஸ)

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை