500 ஆண்டுகளுக்கு முன்னர் துரத்தப்பட்ட யூத சந்ததிகளுக்கு ஸ்பெயின் குடியுரிமை

ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட யூதர்களின் சந்ததிகளுக்கு குடியுரிமை வழங்கும் ஸ்பெயினின் புதிய அறிவிப்பிற்கு 127,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கான காலக்கெடு முடிவுற்ற நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்தே பெரும்பாலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இதில் அதிகபட்சமாக மெக்சிகோவில் இருந்து சுமார் 20,000 விண்ணப்பங்களும் இதனைத் தொடர்ந்து வெனிசுவேலா மற்றும் கொலம்பியாவில் இருந்து அதிக விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

மாத்திய காலத்தில் நாட்டை விட்டு துரத்தப்பட்ட செபார்டி யூதர்களுக்கு செய்த தீங்கிற்கு பரிகாரம் தேடும் சட்டம் ஒன்று ஸ்பெயின் பாராளுமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

ஸ்பெயினில் முஸ்லிம் ஆட்சியாளர்களை தோற்கடித்த கத்தோலிக்க மன்னர்கள் யூதர்கள் மதம் மாறுவதற்கு அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உத்தரவிட்டனர்.

ஸ்பெயினின் அன்டலுசியாவில் இருந்த இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் யூதர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக வாழ்ந்து வந்தனர்.

விண்ணப்பதாரர்கள் மத்திய கால ஸ்பெயினுடன் தமக்கு உள்ள தொடர்பை நிரூபிப்பது அவசியமாகும்.

ஸ்பெயின் யூதர்கள் ஹீப்ரு பெயரான செபார்ட் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். எனவே ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் யூத சந்ததியினர் தம்மை செபார்டி யூதர்கள் என்று அழைத்து வருகின்றனர்.

இதேபோன்ற ஒரு திட்டம் போர்த்துக்கலிலும் அமுலில் உள்ளது.

உலகெங்கும் சுமார் இரண்டு மில்லியன் புலம்பெயர்ந்த செபார்டி யூதர்கள் வாழ்வதாக கருதப்படுகிறது.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை