திருக்கோவில் கல்வி வலயம் 4ஆவது தடவையாக தொடர்ந்து சாதனை

2019ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் திருக்கோவில் கல்வி வலயம் வெள்ளிப்பதக்கமொன்றை பெற்று 4ஆவது தடவையாகவும் தொடர்ந்து சாதனை படைத்துள்ளது.

வெண்ணப்புவ அல்பட் எப். பீரிஸ் உள்ளக அரங்கில் கடந்த (14) இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியின் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான காட்டா போட்டியிலே இச்சாதனை நிலை நாட்டப்பட்டது.

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின் பயிலுநரும், அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர் தர மாணவனுமான சரோன் சச்சின் எனும் மாணவனே வெள்ளிப் பதக்கத்தினை பெற்று மாகாணத்திற்கும் திருக்கோவில் கல்வி வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சகல மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் இம்முறை கிழக்கு மாகாணம் இரு பதக்கங்களை பெற்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு பதக்கமும், அம்பாறை மாவட்டத்திற்கு சரோன் சச்சின் பெற்றுக்கொடுத்த குறித்த ஒரு பதக்கமுமாக மொத்தம் இரு பதக்கங்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பரராஜாசிங்கம் யோகேஸ்வரி ஆகியோரின் புதல்வராவார்

வெற்றி குறித்து பற்றி கருத்துத் தெரிவித்த சிகான். கே.கேந்திரமூர்த்தி, தனது மாணவனான சரோன் சச்சின் இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு தன்னோடு இணைந்து பயிற்சிகளை வழங்கிய கே.ராமிலன் மற்றும் கே.சாரங்கன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Sat, 10/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை