பாதாள சாக்கடைக்குள் 4 மீற்றர் ராஜநாகம் மீட்பு

தாய்லாந்து நாட்டில் பாதாள சாக்கடைக்குள் உலாவிக்கொண்டிருந்த 4 மீற்றர் நீளமுள்ள ராஜநாகத்தை மீட்புப்படையினர் உயிருடன் பிடித்து அப்புறப்படுத்தினர்.

தாய்லந்தில் இதுவரை பிடிபட்டிருக்கும் மிகப்பெரிய பாம்பு இதுவாகும். பாம்பைப் பிடிக்க அதிகாரிகள் பல வழிகளில் முயன்றனர். இறுதியில் அவர்கள் பாம்பின் வாலைப் பிடித்து பாதாள சாக்கடையிலிருந்து அதனை வெளியே எடுத்து வந்தனர்.

பாம்பை பிடிக்க தேவையான உபகரணங்களுடன் சென்ற அவர்கள் சாக்கடைப் பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால் தலையில் விளக்குகளை கட்டிக்கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தண்ணீருக்குள் குறுக்கும் நெடுக்குமாக பாம்பு ஓடியதால் பாம்பை பிடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது. பின்னர் லாவகத்துடன் செயல்பட்ட மீட்பு படையினர் ஒரு வழியாக பாம்பை பிடித்தனர். சுமார் 15 கிலோ எடையுள்ள அந்த ராஜநாகம் பின்னர் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை