39 சடலங்கள் இருந்த லொரியின் ஒட்டுநரிடம் விசாரணை தீவிரம்

குளிரூட்டப்பட்ட கொள்கலன் லொரியில் இருந்து 39 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து அந்த லொரியின் ஓட்டிநரிடம் பிரிட்டன் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோ ரொபின்சன் என்ற 25 வயதான லொரி ஓட்டுநர் போர்ட்டவுனில் கொலை சந்தேகத்தில் கடந்த புதன்கிழமை எசெக்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

வடக்கு அயர்லாந்து அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தி இருப்பதோடு, அங்கு இந்த குற்றத்துடன் தொடர்புபட்ட திட்டமிட்ட குற்ற கும்பல் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்ததாக தேசிய குற்றவியல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பெல்ஜியத்தின் சீப்ரக்கேவில் இருந்து இந்த லொரி இங்கிலாந்தை அடைந்துள்ளது. இந்த கொள்கலனுக்குள் இருந்து 38 பெரியவர்கள் மற்றும் ஒரு பதின்ம வயதினரின் சடலங்களை அம்புலன்ஸ் பணியாளர்கள் மீட்டனர்.

இந்த லொரி மற்றும் கொள்கலன் கைவிடப்பட்ட நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதில் 39 குடியேற்றவாசிகள் காற்றொட்ட அற்ற குளிரூட்டப்பட்ட கொள்கலனுக்குள் அடைக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த கொள்கலனுக்குள் மைனஸ் 25 பாகை வப்பநிலை இருந்துள்ளது. இந்த கொள்கலனுக்குள் இவர்கள் 15 மணி நேரம் அளவு சிக்கி இருந்திருப்பதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் வரலாற்றில் மிகப்பெரிய கொலை குற்ற விசாரணையாக இது அமையும் என்று எசெக்ஸ் பொலிஸார் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

பின் தங்கிய நாடுகளிலிருந்து பிரிட்டனில் புகலிடம் தேடி வரும் அகதிகளை பல்கேரியா வழியாக ஆபத்தான முறையில் லொரியில் கடத்தி வரும்போது, இந்த சோகம் நேரிட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2000 ஆம் ஆண்டில் தெற்கு துறைமுகமான டோவரில் தக்காலி டிரக் வண்டி ஒன்றில் நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த 58 சீன நாட்டவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது பிரிட்டனில் பதிவான சட்ட விரோத குடியேறிகள் தொடர்பான மிக மோசமான சம்பவமாக இருந்தது.

இந்த சம்பவத்தில் படுகொலை குற்றச்சாட்டில் நெதர்லாந்து நாட்டு லொர்ரி ஓட்டுநர் சிறைத் தண்டனைக்கு முகம்கொடுத்தார்.

Fri, 10/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை