'பிரெக்சிட்' காலக்கெடு ஜனவரி 31 வரை நீடிப்பு

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான பிரெக்சிட் கால அவகாசத்தை 2020 ஜனவரி 20 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கொள்கை ரீதியில் இணங்கியுள்ளது. இதனால் திட்டமிடப்பட்ட வரும் வியாழக்கிழமைக்கு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது.

வழங்கப்பட்டிருக்கும் நெகிழ்வுப் போக்கு காரணமாக பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால் பிரிட்டனால் காலா எல்லைக்கு முன்னரும் கூட வெளியேற முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய கெளன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

வரும் டிசம்பர் 12 ஆம் திகதி முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்காக பிரதமர் பொலிஸ் ஜோன்சனின் பிரேரணை தொடர்பில் எம்.பிக்கள் வாக்களிக்கவிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியெறவிருந்தபோதும் பிரெக்சிட் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்ததை அடுத்தே கால அவகாசத்தை நீடிக்க ஜோன்சன் ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்டுக்கொண்டார்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டையே ஜோன்சன் வெளியிட்டு வந்தார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்த நிலையில் அதற்கான காலக்கெடு நீடிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை