இரசாயனவியலுக்கான நோபல் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு நடப்பு ஆண்டில் மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 97 வயது ஜோன் பி குட் எனாப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் ஜப்பானின் அகிரோ யோஷினோ இரசாயனவியலுக்கான நோபல் பரிசை பெறுகின்றனர்

மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயர்ன் மின்கலம் மீதான இவர்களது ஆய்வுமுடிவை பாராட்டி நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. 1901 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் நோபல் குழுவிடம் இருந்து, இதுவரை 183 பேர் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1970ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், ஸ்டான்லி விட்டிங்ஹாம், முதன்முறையாக லித்தியம் மின்கலன்களை உருவாக்கினார்.

ஜோன் குட் எனாப், அந்த லித்தியம் மின்கலத்தின் செயற்திறனை இருமடங்காக உயர்த்தினார். இதன்மூலம் அனைத்து இலத்திரனியல் சாதனங்களில் இதன் பயன்பாடு இன்றியமையாததாக அமைந்தது.

அகிரோ யோஷினோ லித்தியம் மின்கலத்தில் உள்ள தூய லித்தியத்தை அகற்றி, லித்தியம் அயனிகளை பயன்படுத்தி அதன் பாதுகாப்பை பன்மடங்காக அதிகரித்தார். தற்போது நடைமுறையில் இந்த லித்தியம் அயனி மின்கலன்களே பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் அடுத்தடுத்த நாட்களில் இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Thu, 10/10/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக