27 அம்சக் கோரிக்கைகளுடன் சு.கட்சி - பொதுஜன பெரமுன உடன்படிக்கை நேற்று கைச்சாத்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து உருவாக்கியுள்ள அரசியல் கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது.சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரால் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் கைச்சாத்திடப்பட்டது.

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர உட்பட சு.கவின் முக்கியஸ்தர்களும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ, தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உட்பட பெதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தப் புரிந்துணர்வு உடன் படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானதும் இருக்கட்சிகளும் இணைந்து அமுல்படுத்த வேண்டிய 27 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அரசாங்கத்தை எவ்வாறு அமைப்பது தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பன குறித்தும் உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை