சமையலறையில் இருந்த ஓவியம் 26.6 மில்லியன் டொலருக்கு ஏலம்

பிரான்சில் ஒரு வயதான பெண்ணின் வீட்டு சமையலறையில் கிடைத்த ஓவியம் 26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் போனது ஒரு புதிய சாதனையை ஏற்பத்தியுள்ளது.

நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த இந்த ஓவியம், இயேசு கிறிஸ்துவை கேலி செய்வது போன்று மறுமலர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்த பிரபல ஓவியரான சிமாபு வரைந்ததாகும்.

பிரான்சின் கோம்பின் நகரில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் தட்டுகளை சூடாக வைக்கும் இயந்திரத்துக்கு மேலாக இந்த ஓவியம் பல ஆண்டுகளாக யாரின் கவனிப்பும் இன்றி தொங்கி கொண்டிருந்தது.

அந்த பகுதியில் பழைய பொருட்களை ஏலத்தில் விடுபவர் ஒருவர் இதை கவனித்து வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் மேற்கூறிய ஓவியத்தை நிபுணர்களால் ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டார்.

இது மத அடையாளங்கள் கொண்ட ஒரு பழைய ஓவியமென்றும், இதற்கு பெரிய மதிப்பில்லை என்றும் வீட்டின் உரிமையாளர் கருதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை